நாமக்கல்: நாச்சிப்பட்டி பசுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா வருகிற 14ம்தேதி நடக்கிறது. நாமக்கல் வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி கிராமத்தில் புதியதாக பசுபதி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது. இன்று காலை 7.30 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையும், தன பூஜையும், கணபதி ஹோமமும் நடக்கிறது.