ஆலங்குடி, இலுப்பூரில் உள்ள கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகன், வள்ளி-தெய் வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆலங்குடி தர்மசம்வர்த்தினி உடனுறை நாமபுரீஷ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல், 51 காவடி, 108 தீர்த்தக் கலசம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.