புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில், திருப்பவித்ரோத்சவ விழா, இன்று துவங்குகிறது. முதலியார்பேட்டை, வன்னியபெருமாள் கோவிலில், 5ம் ஆண்டு திருப்பவித்ரோத்சவம் இன்று (13ம் தேதி) இரவு 7:00 மணிக்கு விஷ்வக்சேனர் ஆராதனம் பாலிகை பூஜையுடன் துவங்குகிறது. 14ம் தேதி காலை 8:00 மணிக்கு, கும்பஸ்தானம், பவித்ரா மாலைகள் சாற்றுதல், முதல்கால ஹோமம், இரவு 7:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் நடக்கிறது. 15ம் தேதி காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால ஹோமம், இரவு 7:00 மணிக்கு நான்காம் கால ஹோமம், 16ம் தேதி காலை 10 மணிக்கு ஐந்தாம் கால ஹோமம் செய்து, திருமஞ்சனம் மற்றும் மகா கும்பப்ரோஷணம் நடக்கிறது.