தென்காசி: தென்காசி ஷீரடி சாய்பாபா கோயில் இன்று (14ம் தேதி) ஐப்பசி கடைசி விசயாழன் சிறப்பு பூஜை நடக்கிறது. தென்காசி ஆய்க்குடி ரோடு ஸ்ரீரடி சாய்பாபா கோயிலில் இன்று (14ம் தேதி) ஐப்பசி கடைசி வியாழக்கிழமையை முன்னிட்டு காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் சிறப்பு ஆரத்தி, அபிஷேகம், மற்றும் சிறப்பு பஜனை நடக்கிறது. மாலையில் அன்னபூரணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை சுப்புலெட்சுமி மற்றும் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.