பதிவு செய்த நாள்
14
நவ
2013
06:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூநாததர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கடைமுக திர்த் தவாரியை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். துலாமாத முதல்நாள் தீர்த்தவாரி, அமைவாசை தீர்த்தவாரி, திருக்கல்யாணம்,தேரோட்டம், கடைமுக தீர்த்தவாரி, முடவன்முழுக்கு ஆகியவை சிறப்பு. இதன்படி இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி துலாமாத பிறப்பு முதல்நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. கடந்த7ம் தேதி கொடி யேற்றத்துடன் 10 நாள் உற்சவம் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலையில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை அபயாம்பிகை அம்பாள், மாயூரநாதர் சுவாமி மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பெண்கள் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. தொடர்ந்து சுவாமி,அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் முன்மண் டபம் எழுந்தருளினர். பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டாரச்சந்நிதி சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண கோலாகலமாக நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் சுப்ரமணியதம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, மலையமார் உடையார் திருக்கல்யாண அ றக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.