பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஏரிப்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி ஏரிப்பட்டி விநாயகர், சுப்பிரமண்யர், காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 7:15மணிக்கு மேல் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து, விமான கலசம் வைத்தல், விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாக பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, மகா பூர்ணாகுதி, காலை 9:00 மணிக்கு மேல் கோபுர விமானங்குளுக்கு கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் காமாட்சி அம்மன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தசதானம், மகாஅபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.