வைஷ்ணோ தேவி உருவத்துடன் ஐந்து ரூபாய் நாணயம் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2013 10:11
மாமல்லபுரம்: வைஷ்ணோ தேவி உருவம் பொறித்த, 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, மாதா வைஷ்ணோ தேவி உருவம் பொறித்த புதிய, 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. 23 மி.மீ., விட்டம் கொண்ட இந்த நாணயத்தின் முகப்பில், வழக்கமான அசோக துாண், சிங்க முகம், சத்யமேவ ஜெயதே இந்தி வாசகம், நாணய மதிப்பை குறிக்கும் ரூபாய் குறியீட்டுடன் எண்: 5 ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் மாதா வைஷ்ணோ தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நாணயம் தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.