திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் வரும் 24ம் தேதி திருவாசக முற்றோதல் ஞானப்பெரு வேள்வி நடக்கிறது. ஞானானந்த சத்சங்க மண்டபத்தில் நடக்கும் ஞானப்பெருவேள்விக்கு நித்யானந்தகிரி சுவாமிகள், ஓங்காராநந்தர் சுவாமிகள், பிரம்மவித்யாநந்தர் சுவாமிகள் தலைமை வகிக்கின்றனர். திருச்சி சேக்கிழார் மன்றம், திருவாசகம் முற்றோதல் குழு, உறையூர் பஞ்சவர்ணஸ்வாமி கோவில் வாரவழிபாட்டு மன்றம், மணப்பாறை திருவாசகம் அன்பர்கள் குழு, சென்னை, தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றத்தை சேர்ந்த சிவனடியார்கள் சிவ வேள்வியை நடத்துகின்றனர். மாலை 5 மணிவரை நடக்கும் வேள்வியில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை ஞானானந்த நிகேதன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.