தஞ்சாவூர்: தஞ்சை கார்மெல் குழந்தை இயேசு ஆலயத்தில் பவுர்ணமி தின முழு இரவு ஜெப வழிபாடு நடந்தது. இங்கு, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் முழு இரவு ஜெப வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், தஞ்சையில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். ஆலய அதிபர் சேவியர் தாஸ், அருட்தந்தை சகாயதாஸ், அந்தோணி, பீட்டர் உள்பட பலர் பங்கேற்று, ஆசீர்வாதம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று, கூட்டு பிரார்த்தனை செய்தனர்.