காஞ்சிபுரம்: வரதராஜப்பெருமாள் கோவிலில், திருப்பாணாழ்வார் அவதார உற்சவத்தில் பெருமாள் மாட வீதி வலம் வந்தார். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில், பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான, திருப்பா ணாழ்வார் அவதார உற்சவம் நடந்தது. திருமலையில் இருந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மாலை 5:00 மணிக்கு கீழே இறங்கினார். அதன் பின் மாடவீதியில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதிக்கு சென்றார். அங்கிருந்து ஆழ்வார் பிரகாரம் வழியாக உடையவர் சன்னிதிக்கு எழுந்தருளினார். அங்கு சாத்துமறை நடந்த பின் திருப்பாணாழ்வாரும், பெருமாளும் திருமலைக்கு சென்றனர். மலையில், 10 வது படியில் ஆழ்வாருக்கு பெருமாள் மரியாதை செய்தார். பின்னர் திருப்பாணாழ்வார் உடையவர் சன்னிதிக்கு திரும்பினார்.