திருவாவடுதுறை நமச்சிவாய மூர்த்திகள் கோயில் குடமுழுக்கு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2013 02:11
நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் கோயில் மற்றும் அம்பலவாண விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இக்கோயில்களின் குடமுழுக்கு விழா நடைபெற்றது. யாக பூஜைகள் மற்றும் குடமுழுக்கு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன கட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆதீன பணியாளர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.