பதிவு செய்த நாள்
22
நவ
2013
10:11
பழநி: பழநி கோயிலில் 2ம் "ரோப்கார் வடிவமைப்பு குறித்து, கமிட்டியினர், வெளிநாட்டு வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினர். முதல் ரோப்காரின் அருகிலேயே 2ம் ரோப்கார், நிறுவ ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்காக தமிழக அரசு 11 பேர் கொண்ட கமிட்டி அமைத்துள்ளது. 2 வது ரோப்காருக்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த டாபுல்மேர் மற்றும் கொல்கத்தா கான்வேயர் ரோப்வே சர்வீஸ் மற்றும் பிரான்சைச் சேர்ந்த கோமா என்ற நிறுவனமும் இணைந்து, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளன. அந்நிறுவனத்தைச்சேர்ந்த, வல்லுனர்களுடன், கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், இந்துஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், வெளிநாடுகளில் எவ்விதம் ரோப்கார் இயக்கப்படு கிறது, அதன் நவீன தொழில் நுட்பங்கள், வாழ்நாள், பராமரிப்பு விபரங்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில், ""ஒரு மணி நேரத்திற்கு 1200 பேர் வரை, பயணம் செல்லும் வகையில் புதிய ரோப்கார் வடிவமைக்கப்படவுள்ளது. கூட்ட விபர அறிக்கையை ரோப்கார் கமிட்டியினர், சென்னை ஆணையரிடம் அளிக்கவுள்ளனர், என்றார்.