பதிவு செய்த நாள்
22
நவ
2013
10:11
தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடக்கிறது. தூத்துக்குடி வடக்கு சம்பந்த மூர்த்தி தெருவில் அமைந்துள்ள இசக்கி தேவிநிலையம் என்றழைக்கப்படும் இசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 20ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்த புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், ஸ்ரீ மகா கணபதிஹோமம் ,மகாலட்சுமி ஹோமம் தன பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் விக்னேஸ்வர பூஜை, தீர்த்த ஸ்ங்கரஹரணம்ல வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை காலை விக்னேஷ்வர பூஜையும், விசேஷசந்தி பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, விசேஷசந்தியும், மூன்றாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, யந்திரஸ்தாபனம், அஷ்டபந்த மருந்துசாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து நாடிசந்தனம், திரவ்யாகுதி, மகாபூர்ணாகுதி நடக்கிறது. காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஸ்ரீஇசக்கியம்மன் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது.
பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகமும், மஹேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழு தலைவர் இளங்குமரன் தலைமையில் விழாகமிட்டியினர் செய்துவருகின்றனர்.