பதிவு செய்த நாள்
25
நவ
2013
11:11
தர்மபுரி: தர்மபுரி ராகேவேந்திரர் ஸ்வாமி கோவிலில், ராதே கிருஷ்ணா அமைப்பு சார்பில், ராதா, ருக்மணி, சீதாதேவி கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 22ம் தேதி கணபதி ஹோமம், லலிதா சகஸ்ஹரநாம பாராயணம், சிறப்பு பஜனை, ஹரிகீர்த்தனம் நடந்தது. நேற்று முன்தினம் (நவ., 23) விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம், சிறப்பு பஜனையும், ஹரி கீர்த்தனமும், தியானமும் நடந்தது. மாலை மிருதங்க ஹார்மோனியம் டோக்லி கச்சேரி நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு ஊஞ்சல் விருத்தியும், 9 மணிக்கு ராதா, ருக்குமணி, சீதாதேவி கல்யாண உற்சவம் நடந்தது. பிரம்ம ஸ்ரீ ராமனந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், பக்தர்கள் பங்கேற்ற பஜனை நடந்தது. மாலை, 6 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை, ராதாகிருஷ்ணா விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.