சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2013 11:11
திருநெல்வேலி: பாளை.சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாளை.சவேரியார் பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாளை.மறைமாவட்டம் சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பாளை.மறைமாவட்ட முதன்மை குரு ஜோமிக்ஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி, மறையுரை வாசித்தார். இந்நிகழ்ச்சியில், அந்தோணிராஜ், வில்சன், பேராலய பங்குத்தந்தையர் ராபின், பேராலய ஆன்ம குரு சலேத் உட்பட கிறிஸ்தவர்கள், சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் விழாவின் 2ம் நாளான இன்று(25ம் தேதி) காலை பாட்டத்தூர் உதயம் அறக்கட்டளை ஞானப்பிரகாசம் திருப்பலியும், மேலஇலந்தைகுளம் பங்குத்தந்தை மைக்கேல்ராஜ் மறையுரையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு, அந்தோணிராஜ் திருப்பலி, ஆரோக்கியராஜ், பிரான்சிஸ் சேவியர், ஜோசப் வர்கீஸ் மறையுரை வாசிக்கின்றனர்.