திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் உண்டியலில் 12 லட்சத்து 20 ஆயிரத்து 786 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. 26 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியும் கிடைத்தது. நெல்லையப்பர் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. 3 மாதத்திற்கு பிறகு நெல்லையப்பர் கோயில் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில் 12 லட்சத்து 20 ஆயிரத்து 786 ரூபாய் காணிக்கை இருந்தது. மேலும் 26 கிராம் தங்கமும், 140 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணிகளை துணை ஆணையர் பழனிக்குமார், உதவிக் கமிஷனர்கண்ணதாசன், ஆய்வர் ஆனந்த், செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் கண்காணித்தனர். உண்டியல் எண்ணும் பணியில் நெல்லை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.