வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 1008 சங்கு அபிசேகம் நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய குடங்கள் மற்றும் 1008 சங்குகள் வைத்து வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய குடங்கள், சங்குகள் மேளவாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.