*விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றி விட்டு செல்ல அனுமதியுண்டு. *சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும். *சிவன் கோயிலில் மூன்று முறை சுற்ற வேண்டும். *பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும். *பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி, சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி அல்லது அம்மன், தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும். *அரசமரம் வலம் வரும் போது, ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும். அரசமர வலம் பகல் நேரத்தில் மட்டுமே பொருந்தும்.