பதிவு செய்த நாள்
27
நவ
2013
10:11
சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசனுக்காக நடை திறந்து, 10 நாட்களில், 13 லட்சம் டின் அரவணை விற்பனையாகியுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கன மண்டல காலம், 16ம் தேதி துவங்கியது. அது முதல், கோவிலின் முக்கிய வழிபாட்டு பிரசாதமான, அப்பம் மற்றும் அரவணை விற்பனையும் சூடு பிடிக்கத் துவங்கியது. ஒரு பாக்கெட் அப்பம், 25 ரூபாய்; ஒரு டின் அரவணை, 60 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது. கடந்த, 10 நாட்களில், 13 லட்சம் டின் அரவணையும், 5.90 லட்சம் பாக்கெட் அப்பமும் விற்பனையாகியுள்ளது. அப்பம் தயாரிப்பில், 500, அரவணை தயாரிப்பில், 450 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை மையங்களில், தரப்பரிசோதனைக்கு பின் கொண்டு வரப்படும் பொருட்கள், இவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அரிசிமாவு, சர்க்கரை, சுக்கு, சீரகம், கதலிப்பழம், பூவன்பழம், நெய் ஆகியவை சேர்த்து அப்பத்திற்கான மாவு தயாரிக்கப்படுகிறது. அரிசி, சர்க்கரை, கற்கண்டு, முந்திரி, ஏலக்காய், சுக்குப்பொடி, சீரகப்பொடி, நெய், தேங்காய் ஆகியவை அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.