எட்டயபுரம் கோயிலில் மகாதேவாஷ்டமி அன்னம்பாலிப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2013 11:11
எட்டயபுரம்: எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகாதேவாஷ்டமி அன்னபிஷேகம் அன்னம் பாலிப்புவிழா நடந்தது. எட்டயபுரம் சமஸ்தானம் எட்டீஸ்வரர்மூர்த்தி கோயிலில் நடந்த அன்னாபிஷேகம் விழாவில் ஈசன் அன்னலிங்கம் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீராடலில் மகிழ்வன் ஈசன் அவரது பனிவடையில் நீராடலுக்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாட்டில் அனைத்து கடவுளருக்கும் அபிஷேகம் உண்டு என்றாலும் ஈசனுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்னக்கோலத்தில் இறைவனைக்காண அனைவரும் ஏங்குவர் சிவபெருமானுக்கு பதினோரு அபிஷேகங்களை செய்வர் இதை ஸ்ரீருத்ரம் என்பர் சிவபெருமான் பதினோரு வடிவம் கொண்டவர் என்கிறது வேதம் அன்னம் படைக்கும் காரியத்தில் பங்கு பெற்றால் புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகமாகும். எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் அன்னம் பாலிப்புவிழா மகாகணபதி பூஜையுடன் துவங்கியது. அதையடுத்து புண்ணியாவாஜனம் சங்கல்பம் கலச, ஆவாகன பூஜை வேதபாராயணம் ஹோமம், கோயிலில் உட்பிரகாரம் கும்பம் வலம் வந்து மகாஅபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. அதையடுத்து காண்டமணியோசை நாதஸ்வர இசை, சங்குநாதம் முழங்க எட்டீஸ்வரமூர்த்திக்கு அன்னாபிஷேகம் நடந்தது, அன்னலிங்கத்திற்கு நாட்டிய தாண்டவ தீபாராதணை சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னலிங்கத்துடன் ஈசன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். லிங்கத்தில் ஒட்டியுள்ள அன்னத்தை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்பதால் மங்கள வாத்தியங்களுடன் திருவீதி உலா வந்து வடக்கு ரதவீதி தெப்பக்குளத்தில் அன்ன நைவேத்தியம் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. அதையடுத்து உச்சிகால வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோயிலில் உட்பிரகாரம் அன்னம் பாலிப்பு விழா நடந்தது. ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானம் மேனேஜர் ராமகிருஷ்ணன் அன்னாபிஷேக திருபணிக்குழுவினர் செய்திருந்தனர்.