விசிறி சாமியார் எனப் பலராலும் அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரின் அவதார தினம், டிசம்பர் 1-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அவரின் ஆஸ்ரமம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல ஊர்களில் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. சென்னையில், மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்தார், எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து வருடந்தோறும் விமரிசையாகக் கொண்டாடி வரும் யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி விழா, இந்த முறை டிசம்பர் 1-ஆம் தேதி அன்று திருவல்லிக்கேணியில் உள்ள சிங்கராச்சாரி தெருவில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது. இது, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் 95-வது ஜயந்தி விழா. மாலை 5.30 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை யோகியாரின் நாமாவளி பஜனைப் பாடல்கள், அதையடுத்து கர்னாடக இசைக் கலைஞர் கலைமாமணி ஓ.எஸ்.அருண் அவர்களின் தமிழ் பக்திப் பாடல்கள் கொண்ட இசை விருந்து என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.