சபரிமலை: மாளிகைப்புறத்தம்மன் கோயிலில், பகவதி சேவை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். சபரிமலை வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு, மாளிகைப்புறத்தம்மனை வழிபடுகின்றனர். இங்கு தேவிக்கு நடைபெறும் முக்கிய வழிபாடு பகவதிசேவை. கோயில் வளாகத்தில் தனியாக அமைக்கப்பட்ட மாகோலத்தின் நடுவில் விளக்கு வைத்து, அதில் 5 திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. மேல்சாந்தி மனோஜ் நம்பூதிரி தீபாராதனை நடத்துவார். 7 பூஜாரிகள் 45 நமிடம் தேவி மந்திரம் சொல்வர். பின் பாயாசம், அப்பம், வெற்றிலை பாக்கு வைத்து தீபாராதனை நடைபெறும். தேவசம்போர்டு இந்த வழிபாட்டுக்கு 2000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. தினமும் இரவு 7 முதல் 8 மணி வரை இந்த பூஜை நடைபெறுகிறது.