நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சனிப்பிரதோஷம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2013 05:11
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர். இதில் இருந்து முதலில் தோன்றிய விஷத்திலிருந்து இந்த உலக உயிர்களை காப்பாற்றுவதற்கா சிவபெருமான் இந்த ஆலாகால விஷத்தை அருந்தினார். உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சி நடந்த நாள் சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள். இதனால் தான் சனிப்பிரதோஷம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த பிரதோஷ வேளையின்போது சிவன் நந்தயின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடுவதாக ஐதீகம். இதனடிப்படையில் தான் சிவாலயங்களில் நந்திக்கு பலவித அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலையில் (30ம் தேதி)சனிப்பிரதோஷத்தன்று நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.