ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் சிவகாமியம்பாள் கோயிலில் 25 பள்ளி மாணவ, மாணவிகள் உழவார பணி செய்தனர். ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் வன்னியப்பர் சிவகாமியம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ரவணசமுத்திரம் காட் இந்தியா பொறுப்பாளர் செல்லம்மா மேற்பார்வையில் சுமார் 25 பள்ளி மாணவ, மாணவிகள் உழவார பணிகள் மேற்கொண்டனர். ரவணசமுத்திரம் ஸ்ரீலெட்சுமி ஸ்வீட் வெங்கட்ராமன், விக்னேஷ், ஆறுமுகம், முத்து, சங்கரநாராயணன் ஆகியோர் 15 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியரை அழைத்து வந்து வன்னியப்பர் சிவகாமியம்பாள் கோயிலில் உழவார பணியை மேற்கொண்டனர். மாணவ, மாணவிகள் விளக்குகளை சுத்தப்படுத்துதல், சுவாமிக்கு பூஜை உபகரணங்களை சுத்தப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளை செய்தனர். மாணவ, மாணவிகள் சிறு வயதிலேயே உழவார பணியை செயல்படுத்தியதற்காக கோயில் அர்ச்சகர் நாராயணபட்டர் உட்பட பலர் பாராட்டினர். முன்னதாக வன்னியப்பர் சிவகாமியம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.