சிவகங்கை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர் ஆய்வு செய்தார். சிவகங்கரை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது. சோமநாதர் சன்னதி கல் மண்டபம் முழுமையாக பிரிக்கப்பட்டு புதிய கல்தூண்கள் மூலம் மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.