விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரர் உடனுறை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை கார்த்திகை மாதம் மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு புவனேஸ்வரருக்கு சங்கா பிஷேகம் நடந்தது. கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. புவனேஸ்வரர் நாகாபர்ண அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜைகளை சின்னதச்சூர் சங்கர் குருக்கள் செய்தார். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை உபயதாரர் கோவிந்தன், தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி செய்திருந்தனர்.