சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி எனப்படுவார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூறமுடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆகமுடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன்மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். வீட்டில் தனி அறை அமைத்து சபரிமலை சீசன் அல்லாத நாட்களில்கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.