பதிவு செய்த நாள்
05
டிச
2013
10:12
திருப்பதி: திருமலை ஏழுமலையானின் பாதங்கள், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று காலை, தாயார், சர்வ பூபால வாகனத்தில், நாரை வாயை பிளக்கும் கண்ணனாக வலம் வந்தார். ஏழுமலையானும், தாயாரின் பிரம்மோற்சவத்தில், பங்கு கொள்ளும் விதமாக, அவரின் தங்க திருப் பாதங்கள், நேற்று மாலை, திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு, அந்த திருப் பாதங்களை, தாயார் அணிந்து, கருட வாகனத்தில், ஏழுமலையானின் பட்டத்து ராணியாக, மாட வீதியில் வலம் வந்தார். நெசவுத் தொழிலாளர்கள், நேற்று, 10 பட்டுப் புடவைகளை, தாயாருக்கு காணிக்கையாக வழங்கினர்.