பதிவு செய்த நாள்
06
டிச
2013
10:12
பவானி: பவானி, ஊராட்சிகோட்டை மகாபுது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது. பவானி, ஊராட்சிக்கோட்டை மகாபுது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. இதற்காக, கடந்த, 29ம் தேதி யாகசாலைக்கு கால்கோல் விழா நடந்தது. நான்காம் தேதி, கிராம சாந்தியும், விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் போன்றவைகள் நடந்தது. 5ம் தேதி காலை, பவானி கூடுதுறையில் இருந்து, 500க்கு மேற்பட்ட பக்தர்கள் மூலம், புனித நீர் நிரப்பிய தீர்த்த கூடங்களுடனும், தங்கள் வீட்டில் வள ர்த்த முளைப்பாரியுடன், மே ல தாளம் முழங்க ஊர்வலமா க, கோவிலை அடைந்தனர். பின் மாலை, 4 மணிக்கு மேல், மங்கள வாத்தியத்துடன், விழா துவங்கி விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், முதற்கால யாகபூஜை, மஹா தீபாராதனை நடந்தது. இன்று காலை, 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் பூர்ணாகுதிக்கு பின் கலசங்கள் புறப்பட்டு, காலை, 8.30 மணிக்கு மகாபுது மாரியம்மன், ஓம் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பவானி, திருநீலகவுண்டர் வீதியில் உள்ள ராஜவிநாயகர், கருப்பராயன், சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு, 5ம் தேதி, 5 மணிக்கு மங்கள இசை, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி, அனைத்து பூஜைகளும் நடத்தி, 6ம் தேதி காலை, 6 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், அன்னதானம் நடக்கிறது.