பதிவு செய்த நாள்
07
டிச
2013
10:12
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அரசு பஸ்களில், பார்சல்கள் ஏற்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பலத்த சோதனை:காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். படுநெல்லி, ஒலிமுகமதுபேட்டை, கீழம்பி, பாலாறு, டோல்கேட், பொன்னேரி, மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் ஆகிய இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். 140 போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., விஜயகுமார் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். முக்கிய கோவில்கள் மற்றும் மசூதிகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது உத்தரவு: அரசு பஸ்களில் எந்த பார்சலும் ஏற்றக் கூடாது என, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.திருத்தணி முருகன் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.