பதிவு செய்த நாள்
10
டிச
2013
10:12
கூடலூர் : கூடலூரில், தர்ம ரக்ஷண சமிதி சார்பில், ஐயப்பன் கோவில் செல்லும் குருசாமிகளுக்கு பாதை பூஜை நிகழ்ச்சி நடந்தது.கூடலூர் விநாயகர் கோவிலில், தர்ம ரக்ஷண சமிதி சார்பில், ஐயப்ப குருசாமிகள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கூடலூர் வட்ட நிர்வாகி ராமமூர்த்தி தலைமை வகித்தார். கோவை மண்டல அமைப்பாளர் பேசினார். ஐயப்ப பஜனை நடந்தது. தொடர்ந்து, ஐயப்ப குருசாமிகளுக்கு பாதை பூஜை நிகழ்ச்சி நடந்தது. குருசாமிகள், வாழை இலையின் மீது வரிசையாக நிற்க வைத்து, திருநீர், சந்தனம், குங்குமம் மற்றும் பூக்களால், பாதை பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தர்ம ரக்ஷண சமிதியின் நீலகிரி மாவட்ட பொதுச்செயலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.