பதிவு செய்த நாள்
10
டிச
2013
11:12
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், ஸ்ரீ ராமர் கோவிலில் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை ஏழாம் ஆண்டு எழுந்தருளிய தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், ஸ்ரீராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த 2007ம் வருடம் திருப்பதியில் இருந்து, ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டு, திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஏழாம் ஆண்டு எழுந்தருளிய தினத்தையொட்டி நேற்றுக்காலை 10 மணிக்கு திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ ராமநாம ஸங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு ஸ்ரீராம நாம மகிமை என்னும் தலைப்பில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவும், 7 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.