பதிவு செய்த நாள்
10
டிச
2013
11:12
உளுந்தூர்பேட்டை: ஆதனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அழகிரி வெங்கடேச பெருமாள் சமேத சவுந்தரவள்ளி தாயார் கோவில் சைவ சித்தாந்த பேரவை குழுவினர் உழவார துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அழகிரி வெங்கடேச பெருமாள் சமேத சவுந்தரவள்ளி தாயார் கோவிலில் முள்செடிகள் ஆக்கிரமித்திருந்தன. கள்ளக்குறிச்சி திருவாடுதுறை குருபீடபுரம் சைவ சித்தாந்த பேரவை அமைப்பாளர் தமிழகன், தலைவர் வெங்கடாசலம் ஆகியோகர் தலைமையில், செயலாளர் வேலாயுதம், பொருளாளர் தேவ ராஜன், துணை செயலாளர் சந்தானம், துணை தலைவர் பாவணநாதன், பச்சையாப்பிள்ளை, மகளிரணி ராதா, வள்ளி, ராஜம்பாள் உள்ளிட்ட 100 பேர் கோவில் உழவார துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இக்குழுவினருக்கு ஆதனூர் சமூக ஆர்வலர்கள் வேதசவுந்தர ராஜ், மொட்டையாண்டி, சண்முகம், கோவிந்தன் வரவேற்பு அளித்தனர்.