திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாணிக்க வாசகர் உற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவின் இறுதியாக 18ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. நேற்று காலை 9 மணிக்கு மாணிக்கவாசகருக்கு விசேஷ அபிஷேகம், ஆராதனை, திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாராயணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாணிக்க வாசகர் எழுந்தருளி வீதியுலா நடந்தது. தினசரி நடக்கும் விழாவின் 10ம் நாளான 18ம் தேதி காலை 6 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், சோட சோபவுபச்சார தீபாராதனை, ஆருத்ராதரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.