பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
சுறுசுறுப்பு மிக்க மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக காணப்படவில்லை. ஆனாலும், உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாய் 6-ம் இடமான கன்னியில் இருக்கிறார். அங்கு அவரால் வருமானம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணம் வாங்கலாம். மேலும் ஜன.2ல் புதன் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்திற்கு சென்று நற்பலனை கொடுப்பார். சந்திரனும் அவ்வப்போது நற்பலனை கொடுக்க தவறமாட்டார். புதன் 9-ம் இடத்தில் இருப்பதால் மன வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆனாலும் புதன் ஜன.2ல் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு வருவதால் பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். ஒரே ராசியில் இருக்கும் சனி, ராகு,கேது சாதகமற்று இருந்தாலும் குருவின் பார்வை சாதகமாக உள்ளது. குடும்பத்தில் தம்பதி இடையே அன்பு நீடிக்கும். டிச.20,21ல் உறவினர் வகையில் ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஜன. 5,6ல் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செவ்வாயால் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். ஜன.2க்குப் பிறகு உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் அவப்பெயர் வரலாம். அலைச்சலை சந்திக்க நேரிடும். கலைஞர்களுக்கு அவசியமான தேவையை தவிர மற்றதை சிந்திக்க கூடாது. அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலனை காண்பர்.மாணவர்களில் சிலர் படிப்பில் பின்தங்குவர். கவனம் தேவை. ஜன.2க்குப் பிறகு அனுகூலமாக இருக்கும். புதனால் கல்வி வளம் பெருகும். விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். பெண்கள் உற்சாகமாக செயல்படுவர். புத்தாடை அணிகலன்கள் வாங்குவர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: சிவப்பு, பச்சை
நல்லநாள்: டிச.18, 19, 25, 26,27,28, ஜன.3, 4, 5, 6, 9,10
கவனநாள்: டிச.29, 30,31 சந்திராஷ்டமம்
வழிபாடு:மாரியம்மனை வணங்கி வாருங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.