பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
நற்பண்பு கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் முழுவதும், சுக்கிரன் நற்பலனை கொடுப்பார். சுக்கிரனால் சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். வசதி பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். கேது 11-ல் இருந்து நன்மை தருவார். அவரால் காரிய வெற்றி ஏற்படும். உங்கள் ராசிநாயகன் புதன் 7-ம் இடத்தில் இருப்பது சிறப்பு அல்ல. குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். கணவன், மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். ஆனால் ஜன.2ல் புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு வருவதால் முயற்சியில் வெற்றி கிட்டும். அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். செவ்வாய் இந்த மாதம் 4-ம் இடத்தில் இருப்பது நட்பில் கவனம். உடல் நலம் பாதிக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. பணியில் கடின உழைப்பு தேவைப்படும். ஜன.2க்கு பிறகு பணிச்சுமை குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அலைச்சலை சந்திக்க நேரிடும். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சிறப்பான பலன் காண்பர். பிற்போக்கான நிலையில் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். புதனால் ஜன.2க்கு பிறகு கல்வி வளம் பெருகும். போட்டியில் வெற்றி காணலாம். விவசாயிகள் பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் கூடாது. பெண்கள் கணவனிடம் விட்டுக்கொடுத்து போகவும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம்.வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வயிறு தொடர்பான உபாதை வரலாம். ஜன.5,6ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.
அதிர்ஷ்டஎண்: 5,6 நிறம்: வெள்ளை, சிவப்பு, பச்சை
நல்லநாள்: டிச.18, 19,22,23, 24, 29,30, 31, ஜன.1, 2, 7, 8, 9,10
கவனநாள்: ஜன.3,4 சந்திராஷ்டமம்
வழிபாடு: விநாயகர், பெருமாள் வழிபாடு முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். சூரியனையும், நாகதேவதையையும் வணங்கி வாருங்கள்.