பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
தைரியம் கொண்ட கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் உங்கள் ராசிக்கு 6 ல் இருக்கிறார். பகைவர்களை வெல்வீர்கள். பணபலம் கூடும். பணியில் மதிப்பு அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். ஆரோக்கியம் மேம்படும். பூமிகாரகனாகிய செவ்வாய் 3-ம் இடமான கன்னியில் இருக்கிறார். அதன் மூலம் முன்னேற்றமான பலனை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலம் வாங்க யோகமுண்டு. கல்விக் காரகனான புதன் 6-ம் வீட்டில் இருந்து நன்மைகளை அள்ளித் தருவார். எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுப நிகழ்ச்சி நடக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஜன.2ல் புதன் 7-ம் இடத்துக்கு சென்று பிற்போக்கான பலன் தரலாம். குறிப்பாக கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு வரலாம் . ராசிக்கு பகை கிரகமான சுக்கிரன் மாதம் முழுவதும் 7-ம் இடமான மகரத்தில் இருப்பதால், பெண்கள் வகையில் தொல்லை தரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பொதுவாக பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அனாவசிய செலவை தவிர்க்கவும்.குடும்பத்தில் பெண்களால் நன்மை ஏற்படும்.புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். ஜன.2க்குப் பிறகு விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எதிரியால் தொல்லை ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை. கலைஞர்களுக்கு ஒப்பந்தம் பெறுவதில் தடை குறுக்கிடும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோனை கிடைக்கும். ஜன.2 க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் படிப்பில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு பெண்களால் குடும்பம் சிறக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். ஜன.7,8ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.
அதிர்ஷ்ட எண்: 2,3,9 நிறம்: செந்தூரம், சிவப்பு
நல்லநாள்: டிச.16, 17, 20,21, 25, 26, ஜன.1, 2, 3,4, 9,10, 11,12,13
கவனநாள்: ஜன.5,6
வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபட்டு கடலை தானம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு தைரியத்தை கொடுக்கும்.