வள்ளியூர் சாமியார்பொத்தையில் நாளை கிரிவல தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2013 10:12
வள்ளியூர்: வள்ளியூர் சாமியார்பொத்தை ஸ்ரீபுரம் முத்துகிருஷ்ணய்வாமி 100வது குருபூஜையை முன்னிட்டு நாளை (12ம் தேதி) கிரிவல தேரோட்டம் நடக்கிறது.வள்ளியூர் சாமியார்பொத்தை ஸ்ரீபுரம் முத்துகிருஷ்ண ய்வாமி மிஷன் சார்பில் மகாமேரு மண்டபம் அமைக்கப்பட்டு முத்துகிருஷ்ண ய்வாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. முத்துகிருஷ்ண ய்வாமியின் 100வது குருபூஜையை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடக்கும் குரு ஜெயந்தி விழா துவங்கியது. தினமும் காலையில் வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையும், அதன்பின்பு மகாமேரு மண்டபத்தில் முத்துகிருஷ்ண ய்வாமிக்கு சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. மாலையில் முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் சிறப்பு பூஜையும், பஜனையும் நடக்கிறது.தொடர்ந்து சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின் மாதாஜி பூஜ்யஸ்ரீவித்தம்மா பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். 7ம் திருவிழாவான நாளை (12ம் தேதி) கிரிவல தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் பூஜ்ய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா கிரிவல தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். பின்பு தேர் சட்டுபொத்தையை ய்ற்றி அமைக்கப்பட்டுள்ள 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் இழுத்து செல்கின்றனர். லலிதா கலாமந்திர் மாணவ, மாணவிகளின் பரததநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் தேரோட்டத்தின் போது நடக்க இருக்கிறது. ஏற்பாடுகளை முத்துகிருஷ்ண ய்வாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.