பதிவு செய்த நாள்
13
டிச
2013
10:12
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான அலுவலகப் பணி முழுவதையும், கம்ப்யூட்டர் மயமாக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம், தலைமை அலுவலகத்தில், முதலில் அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். பின், மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும். திருமலையில், வாடகை அறைகள் முன்பதிவு, சேவை டிக்கெட்கள் விற்பனை, ஊழியர்களின் வருகை பதிவேடு ஆகியவை, கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளன. இதன் மூலம், திருமலை - திருப்பதி தேவஸ்தான வாகனங்களின் போக்குவரத்து, ஆவணம், வருமானம், கிடங்குகளில் உள்ள பொருட்கள் விவரத்தை, எளிதில் தெரிந்து கொள்ள முடியும். தேவஸ்தானத்திடம் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, அவற்றை மற்றவருக்கு அளித்துள்ள விவரம், வாடகைக்கு எடுத்துள்ள வாகனம் போன்றவையும், கம்ப் யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. ஊழியர்கள் வருகைப் பதிவேடில் கையொப்பம் இட்டு விட்டு, வெளியில் செல்வது தவிர்க்கப்படும். இவ்வசதியை, தலைமை அலுவலகத்தில் அமல்படுத்திய பின், திருமலைக்கும், தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மற்ற கோவில்கள் மற்றும் அலுவலகங்களுக்கும், பிற மாநிலங்களில் உள்ள, விசாரணை அலுவலகங்களுக்கும் விரிவுப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.