சிவனை பஞ்சபூதங்களின் வடிவாகவும் வணங்குகிறோம். அதனால், அவர் இந்த பிரபஞ்சத்திற்கே பொதுவானவர். பஞ்சபூத தலங்களும், சிவவழிபாட்டில் தோய்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களும், இறைவன் அடியாருக்கு நடத்திய திருவிளையாடல்களும் தென்னகமான தமிழகத்தை மையமிட்டே அமைந்தன. அதனால், தென்னாடுடைய சிவனே என சிறப்பித்துக் கூறுகிறோம்.