Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்னாடுடைய சிவனே போற்றி என்று ... மனமும் குணுமும் மாறாது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கை இருந்தால் போதும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
02:12

*மக்களிடம் காணப்படும் ஏற்றத்தாழ்வு நீங்க ஒரே வழி அன்பு மட்டுமே. அன்பில்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை.
*இன்பத்தை தேடி எங்கும் அலையவேண்டாம். அன்பு உண்டானால் இன்பம் உண்டு.
*அன்பு கொள்கையில் இருந்தால் மட்டும் போதாது. செய்கையில் வெளிப்பட வேண்டும். உன்னிடம் கோடி ரூபாய் இருந்தாலும், தேச நன்மைக்காக கொடுத்துவிட்டு ஏழையாகி விடத் துணிவாயானால், நீ அன்புடையவனாகக் கருதப் படுவாய்.
*நேரத்தை வீணாகக் கழிப்பது கூடாது. பயனுள்ள செயல்களில் ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஈடுபட வேண்டும்.
*கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில்விழுவதைப் போல, மனித சமூகம் நன்மையை நன்றாக உணர்ந்தும்கூட, தீமையை உதற வலிமையின்றி தத்தளிக்கிறது.
*பொய்மை, நயவஞ்சனை, நடிப்பு, ஏமாற்றுதல் போன்ற இழிபண்புகளால் பொருள்ஈட்டுவது நாய்ப்பிழைப்பு.
*எப்போதும் மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்தமனதுடன் இருக்க முயலுங்கள். இடைவிடாமல் தொழிலில் ஈடுபட்டு பெருமையுடன் வாழுங்கள். ஒருவேளை இவற்றையெல்லாம் செய்தும், நன்மையேதும் கிடைக்கவில்லையென்றாலும், விதிவசம் என்று மகிழ்ச்சியோடிருங்கள்.
*கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்து செலுத்துங்கள்.
*தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
*கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி.. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வத்தின் அருளைப் பெற முடியும்.
*துளியும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை உடையவன் எவனோ, அவனே கடவுள்.
*எதுவரை மனிதன் அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயத்தை விட்டு விட்டால் கிருதயுகம்(சத்தியயுகம்) அந்த கணமே கைமேல் வந்து விடும்.
*அமைதி, தைரியம், சக்தி, ஆற்றல், அருள், பக்தி சிரத்தை, பலம், தேஜஸ் போன்ற நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்.
*மனிதனுக்குப் பகைவர்கள் வெளியுலகில் இல்லை. அவனுக்கு உள்ளேயே தான் இருக்கிறார்கள். பயம், கோபம், சந்தேகம், பொறாமை போன்ற தீய பண்புகளே அந்த எதிரிகள்.
*நம்பிக்கை இருந்தால் ஆகாய கங்கை கூட பூமிக்கு வந்துவிடும். எவ்வளவு பெரிய ஆபத்து வாழ்வில் குறுக்கிட்டாலும், நம்பிக்கை இருந்தால் வெற்றி வந்து சேரும்.
*நம்பிக்கையின் முதல் லட்சணமே விடாமுயற்சி தான். முயற்சி இருப்பவனுக்கு துன்பம் கூட பயமுறுத்தாது. உள்ளத்தில் சோர்வு உண்டாகாது.
*நல்லவிஷயத்தை எடுத்து சொல்வது எளிதானது. ஆனால், சொன்னபடி நடந்து காட்டுவது அரிதானதானது.
*ஒரு செயலில் ஈடுபட்டு முயற்சி செய்யும்போது, நம்மை பிறர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், நம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் உதவிகள்  தானாகவே வரும்.
-தேசியகவி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar