Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடுதலாக 32 ... ரோப்கார் இயக்கத்தில் சிக்கல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அப்பம் விற்பனையில் தொடரும் கட்டுப்பாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
11:12

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு தொடர்கிறது. ஒருவருக்கு 10 பாக்கெட் அப்பம் வழங்கப்படுகிறது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அப்பம் மற்றும் அரவணை. அரவணை பக்தர்கள் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. அப்பமும் தொடக்கத்தில் அவ்வாறு வழங்கப்பட்டது. கூட்டம் அதிகரித்த போது தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. இதனால் ஒரு பக்தருக்கு அதிக பட்சமாக 30 பாக்கெட் அப்பம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கியதால் ஸ்டாக் பெருமளவு குறைந்தது. இதை தொடர்ந்து ஒரு பக்தருக்கு ஐந்து பாக்கெட் மட்டும் வழங்கப்பட்டது. இதனால் தேவையான அப்பங்கள் வாங்க பக்தர்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. நேற்று ஒரு பக்தருக்கு 10 பாக்கெட்வீதம் வழங்கப்பட்டது. இதனால் மாளிகைப்புறம் அருகே உள்ள பிரசாத மண்டபத்தில் அப்பம் தயாரிக்க மேலும் பத்து அடுப்புகள் அமைக்கப்பட்டது. காஸ் மூலம் இதில் அப்பம் தயாரிக்கப்படும். தினசரி ஒரு லட்சம் பாக்கெட் என்பதற்கு பதிலாக, ஒரு லட்சத்து பத்தாயிரம் பாக்கெட் என உற்பத்தி அதிகரிக்கும். தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பாக்கெட்கள் தேவை என்ற நிலையில், 15 ஆயிரம் பாக்கெட்கள் பற்றாக்குறையாக உள்ளது. பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்தால் மட்டுமே, அப்பம் கட்டுப்பாட்டை நீக்க முடியும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar