பதிவு செய்த நாள்
14
டிச
2013
11:12
புதுச்சேரி:சிவோஹம் அறக்கட்டளை சார்பில், தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஊசுட்டேரி அடுத்த பூத்துறை கிராமம், கணபதி நகரில், சிவோஹம் அறக்கட்டளை சார்பில், தியான மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவிமுக்தேஸ்வரர் என்ற திருப்பெயருடன், யோக தியானலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தியான மையம் திறப்பு விழா மற்றும் லிங்க பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. பெருங்களத்தூர் சாரதா சக்தி பீடத்தின் அண்ணாமலையாண்டி சிவயோக சித்தர், லிங்கத்துக்கு கலசாபிஷேகமும், தீபாராதனையும் செய்தார். மாலையில், தியான லிங்கத்துக்கு மகா அபிஷேகம் நடந்தது.விழாவில், சிவோஹம் அறக்கட்டளை தலைவர் சிபி சுவாமிநாதன் வரவேற்றார். சட்டசபை எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், அமைச்சர் ராஜவேலு, நமச்சிவாயம் எம்.எல்.ஏ., ரீஜென்சி செராமிக் நிறுவன சேர்மன் டாக்டர் ஜி.என்.நாயுடு, ராஜ்குமார் அய்யர், மாநில காங்., பொதுச் செயலாளர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.