கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த கோவிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடைபெற்றது.இதையொட்டி நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு நிர்மால்யதரிசனமும், பஞ்சாபிஷேகமும், உதய மார்த்தாண்ட பூஜையும், மதியம் உச்சகால பூஜையும், அன்னதானமும் நடந்தது.