கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோயிலில் 17வது ஆண்டாக சுதர்ஸன ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.சுதர்ஸன ஜெயந்தியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு சங்கல்பம், சுதர்ஸன ஹோமம், கும்ப ஜெபம், சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனையும், சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, அலங்காரம், திருவாரதனம், மந்திர புஷ்பம் அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் மாதவ பட்டாச்சாரியார் செய்திருந்தார்.