Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தத்வமசி என்பதன் பொருள் தெரியுமா? ஐயப்பமார்களே முதலில் உங்கள் ஊர் காவல் தெய்வத்தை கவனியுங்கள் ஐயப்பமார்களே முதலில் உங்கள் ஊர் ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
ஐயப்பன் 108 போற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2013
01:12

சங்கடங்கள் போக்கும் சரண கோஷம்!

கன்னிமூல கணபதியே... சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியே... சரணம் ஐயப்பா
ஹரிஹரசுதனே.... சரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனே... சரணம் ஐயப்பா
ஆபத்தில் காப்பவனே...சரணம் ஐயப்பா
இதயபீட வாசனே... சரணம் ஐயப்பா
இன்னலில் காப்பவனே... சரணம் ஐயப்பா
ஈசனின் திருமகனே ... சரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமே... சரணம் ஐயப்பா

உண்மைப் பரம்பொருளே... சரணம் ஐயப்பா
உலகாளும் காவலனே... சரணம் ஐயப்பா
ஊழியிலும் காப்பவனே... சரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
எளியோர்க்கு அருள்பவனே... சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே... சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே... சரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியே... சரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியே... சரணம் ஐயப்பா
ஐயமெல்லாம் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா

ஒப்பில்லாத் திருமேனியே... சரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கே... சரணம் ஐயப்பா
ஓம்காரப் பரம்பொருளே... சரணம் ஐயப்பா
ஓதும் மறைபொருளே... சரணம் ஐயப்பா
ஒளடதங்கள் அருள்பவனே... சரணம் ஐயப்பா
சௌபாக்கியம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
கலியுக வரதனே... சரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமே... சரணம் ஐயப்பா
சபரிமலை சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
சிவன்மால் திருமகனே... சரணம் ஐயப்பா

சிந்தனையில் நிறைந்தவனே... சரணம் ஐயப்பா
அச்சன்கோயில் அரசே... சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவே... சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலகனே... சரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனே... சரணம் ஐயப்பா
வாவரின் தோழனே... சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே... சரணம் ஐயப்பா
வீர மணிகண்டனே... சரணம் ஐயப்பா
உத்திரத்தில் உதித்தவனே... சரணம் ஐயப்பா
பம்பையில் பிறந்தவனே... சரணம் ஐயப்பா

பந்தளத்தில் வளர்ந்தவனே... சரணம் ஐயப்பா
சகலகலை வல்லோனே... சரணம் ஐயப்பா
சாந்தம் நிறை மெய்ப்பொருளே... சரணம் ஐயப்பா
குருமகன் குறைதீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருதட்சணை அளித்தவனே... சரணம் ஐயப்பா
புலிவாகன புண்ணியனே... சரணம் ஐயப்பா
புலிப்பாலைக் கொணர்ந்தவனே... சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருவின் குருவே... சரணம் ஐயப்பா
துளசிமணி மார்பனே... சரணம் ஐயப்பா

தூயவுள்ளம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே... சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
நித்ய பிரம்மசாரியே... சரணம் ஐயப்பா
நீலவஸ்திர தாரியே... சரணம் ஐயப்பா
பேட்டை துள்ளும் பேரருளே... சரணம் ஐயப்பா
பெரும் வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
சாஸ்தாவே பரம்பொருளே... சரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரருளே... சரணம் ஐயப்பா
பேரூர்த்தோடு தரிசனமே... சரணம் ஐயப்பா

பேதமையை ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
காளைகட்டி சிவன் மகனே... சரணம் ஐயப்பா
அதிர்வேட்டுப்பிரியனே... சரணம் ஐயப்பா
அழுதைமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
ஆனந்த கோஷப் பிரியனே... சரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றமே... சரணம் ஐயப்பா
உடும்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
இஞ்சிப்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
கரியிலந்தோடே... சரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா

கரிமலை இறக்கமே...சரணம் ஐயப்பா
பெரியானை வட்டமே... சரணம் ஐயப்பா
சிறியானை வட்டமே... சரணம் ஐயப்பா
பம்பா நதித் தீர்த்தமே... சரணம் ஐயப்பா
பாவமெல்லாம் அழிப்பவனே... சரணம் ஐயப்பா
திரிவேணி சங்கமமே ... சரணம் ஐயப்பா
திருராமர் பாதமே... சரணம் ஐயப்பா
சக்தி பூஜை கொண்டவனே... சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் செய்தவனே... சரணம் ஐயப்பா
தீபஜோதித் திருஒளியே ... சரணம் ஐயப்பா

தீராத நோய் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே... சரணம் ஐயப்பா
பவவினைகள் ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
தென்புலத்தார் வழிபாடே... சரணம் ஐயப்பா
திருப் பம்பையின் புண்ணியமே... சரணம் ஐயப்பா
நீலிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
நிறைவுள்ளம் தருபவனே... சரணம் ஐயப்பா
அப்பாச்சி மேடே... சரணம் ஐயப்பா
இப்பாச்சி குழியே... சரணம் ஐயப்பா
சபரி பீடமே... சரணம் ஐயப்பா

சரங்குத்தியாலே... சரணம் ஐயப்பா
உரல்குழி தீர்த்தமே... சரணம் ஐயப்பா
கருப்பண்ணசாமியே... சரணம் ஐயப்பா
கடுத்த சாமியே... சரணம் ஐயப்பா
பதினெட்டாம்படியே ... சரணம் ஐயப்பா
பகவானின் சன்னதியே... சரணம் ஐயப்பா
பரவசப் பேருணர்வே... சரணம் ஐயப்பா
பசுவின் நெய்யே... சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே... சரணம் ஐயப்பா
நாகராஜப் பிரபுவே... சரணம் ஐயப்பா

மாளிகைப் புரத்தம்மனே... சரணம் ஐயப்பா
மஞ்சமாதா திருவருளே... சரணம் ஐயப்பா
அக்கினி குண்டமே... சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே... சரணம் ஐயப்பா
பஸ்மக் குளமே... சரணம் ஐயப்பா
சற்குரு நாதனே... சரணம் ஐயப்பா
மகர ஜோதியே... சரணம் ஐயப்பா
மங்கள மூர்த்தியே... சரணம் ஐயப்பா

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழை பொறுத்து அருளும் சத்தியமான பொன்னு பதினெட்டுப்படி வாழும் சுவாமியே...சரணம் ஐயப்பா!

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar