பதிவு செய்த நாள்
17
டிச
2013
11:12
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவி லில் சுப்ரபாத ஒலிபரப்பு துவங்கியது. மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்றது. இங்கு ஸ்தலசயனப்பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உட்பட, பல சன்னிதிகள் உள்ளன. கோவிலில் தினமும் அதிகாலை மற்றும் மாலைவேளைகளில், சுப்ரபாதம், ஆண்டாள் திருப்பாவை, மங்கல இசை என, ஒலிபரப்புவது நீண்டகால வழக்கம். இந்நிலையில் கோவில் நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளாக ஒலிபரப்புவதில்லை. இதுகுறித்து, சமீபத்தில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த கோவில் நிர்வாகம், மீண்டும் நேற்று முதல் மங்கல ஒலிபரப்பை துவக்கியது. இதுகுறித்து, கோவில் மேலாளர் சந்தானம் கூறும்போது, தினமும் காலை, 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் ஒலிபரப்புவோம், என்றார்.