திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாலை 5 மணிக்கு நந்திகேஸ்வரர்க்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மூலவர் வீரட்டானேஸ்வரருக்கும் தீபாராதனை நடந்தது. அலங்கார மண்டபத்தில் பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் சோடசோபஉபச்சார தீபாராதனை நடந்தது. கார்த்திகை மாதம் இரண்டாம் முறை, தேய்பிறையில் வந்த பிரதோஷத்தை பக்தர்கள் மகா பிரதோஷமாக பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.