பதிவு செய்த நாள்
17
டிச
2013
11:12
விழுப்புரம்: வளவனூர் ரயிலடி சித்து பால சுப்ரமணியர் கோவிலில், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10 மணிக்கு அய்யப்பன் பஜனை பாடல்களும், இரவு 8 மணிக்கு விநாயகர், முருகர், அய்யப்பன் சுவாமி வீதியுலா நடந்தது. அய்யப்ப சேவா சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சிகாமணிராஜன், மாவட்ட தலைவர் ரவி, செயலர் முருகேசன், புரவலர் பியாரேலால்சேட், பொருளாளர் சங்கரலிங்கம், இணை செயலாளர் சிவதனசேகரன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிளை தலைவர் பாவாடை, துணை தலைவர் பாலு, செயலர் ஆறுமுகம், இணை செயலர் முருகன், பொருளாளர் ஏழுமலை செய்தனர்.