பதிவு செய்த நாள்
18
டிச
2013
11:12
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று மாலை கருட சேவை நடைபெற்றது. திருமலையில், பிரம்மோற்சவ சமயத்தில் நடைபெறும் கருடசேவையை, காண முடியாத பக்தர்களின் வசதிக்காக, மாதந்தோறும், பவுர்ணமி நாளில், கருடசேவை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று, உற்சவ மூர்த்தியான, மலையப்ப சாமி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, நேற்று முதல், சுப்ரபாத பாராயணத்திற்கு பதிலாக, திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டது. அது போல், தோமாலை, அர்ச்சனை சேவைகள் ஏழு மலையானுக்கு, தனி மையில் நடத்தப்பட்டது. மேலும், தினமும் இரவு, போக சீனிவாச மூர்த்திக்கு நடைபெறும், ஏகாந்த சேவை நேற்று முதல், ஸ்ரீகிருஷ்ணருக்கு நடத்தப்பட்டது. மார்கழி மாதம் முடியும் வரை, இதே நடைமுறை பின் பற்றப்படும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.